GuidePedia

0




ஆரஞ்சு மிட்டாய் எந்த மாதிரியான படம்?

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஆரஞ்சு மிட்டாய் ஒரு Bitter Sweet படம். தந்தை மகன் பாசத்தை தெளிவாக எடுத்துக்காட்டும் படமாக இது இருக்கும்.

காமெடி அதிகம் இருந்தாலும் இது ஒரு முழு காமெடி படம் என்று கூறமுடியாது.

விஜய் சேதுபதியுடன் ஏற்பட்ட அறிமுகம் பற்றி? உங்கள் கதைக்கு எதனால் அவரை தேர்ந்தெடுத்தீர்கள்?

விஜய் சேதுபதியை எனக்கு வெகு காலம் முன்பிருந்தே தெரியும். அவர் பிட்சா படம் நடிப்பதற்கு முன்பே நான் கதையை அவரிடம் கூறியிருந்தேன். அப்போது படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை.

இடையில் நான் வேறு படத்திற்காக அமெரிக்கா சென்று வருவதற்குள், விஜய் சேதுபதி 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம்' போன்ற வெற்றி படங்கள் மூலம் முன்னணி நடிகராக வளர்ந்திருந்தார்.

மீண்டும் அவரை நான் அணுகியபோது அவர் 'இந்த படத்தில் நடிக்க போதுமான அளவு நாட்கள் ஒதுக்க முடியாது, வேண்டுமானால் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன்' என உறுதியளித்தார்.

பிறகு வயதானவராக நடிக்க பல நடிகர்களை அணுகினோம், ஆனால் யாருக்கும் அது பொருந்தவில்லை. இறுதியில் விஜய் சேதுபதி "நான் நடித்தால் எப்படி இருக்கும் ?' என கேட்க, உடனடியாக அவருக்கு மேக்கப் போட்டு பார்த்தோம். அவருக்கு பொருத்தமாக இருந்ததால், அவரையே ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்தோம்.

ஏன் இந்த படத்துக்கு ஆரஞ்சு மிட்டாய் என்ற பெயர்?

படத்தை பொறுத்தவரை விஜய் சேதுபதி கையில் எப்போதுமே டப்பா நிறைய ஆரஞ்சு மிட்டாய் இருக்கும். மனசு சரி இல்லை அல்லது மோசமான நேரத்தில் இந்த ஆரஞ்சு மிட்டாய் ருசிப்பார், ஆனால் என்னை பொறுத்த வரை ஆரஞ்சு மிட்டாய் ஒரு சுவையான சம்பவத்தை நினைவுபடுத்தும், நம் வாழ்கையில் சோர்வடையும் பொழுது இதை ருசித்து பாருங்கள் ஒரு சுவையான நினைவுகள் பிறக்கும்.

விஜய் சேதுபதி வசனம் எந்தளவுக்கு உதவியது?

விஜய் சேதுபதி எழுதி கொடுத்த வசனம் எனக்கு மிக பெரிய உதவியாக இருந்தது, நான் முழு வசனத்தையும் ஆங்கிலத்தில் தான் எழுதி வைத்திருந்தேன், அவருடைய வசனம் இந்த படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது ....உண்மையை சொல்லவேண்டுமானால் ஒரு நடிகர் வசனம் எழுதியது மிகவும் எளிதாகவும் அதே சமயம் அதை உள்வாங்கி கொண்டு அற்புதமான நடிப்பை வெளிபடுத்த முடியும் . இதை நான் விஜய் சேதுபதியிடம் கண்டேன்

விஜய் சேதுபதி ஒரு தயாரிப்பாளராக எப்படி?

நான் ரொம்ப லக்கி விஜய் சேதுபதி யே எனக்கு தயாரிப்பாளராக கிடைத்தது . படப்பிடிப்பு தொடங்கவதற்கு முன்பு மிகவும் பிஸியாக இருந்த நேரத்தில் எனக்கு 10 நாள் கால்ஷீட் கொடுத்தார். ஒரு இயக்குனராக எனக்கு இந்த படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் விஜய் சேதுபதி என்னிடம் வந்து எந்தவித அவசரமின்றி நிதானமாக படம் எடுங்கள்...உங்களுக்கு திருப்தி வரும் வரை யாரயும் விட வேண்டாம் என்றார் ..பொதுவாக எந்தவெரு தயாரிப்பாளர்களும் இப்படி சொல்ல மாட்டார்கள் .

பல மொழிகளில் குறும் படம் எடுக்க ஆர்வம் எப்படி வந்தது?

முதலில் என் கலை பயணத்தை ஒரு முழு நீள திரைப்பட இயக்குனராக தொடங்கினேன் . 2001 ம் ஆண்டு டிஜேவு என்ற படத்தை இயக்கினேன் அதை ஸ்ரீகர் பிரசாத் தயாரித்தார். அப்போது இந்த தோழி நுட்ப வளரிசி ஒன்று பெரிய அளவில் இல்லை ..நமக்கு தோன்றும் ஒரு சில விஷயம் பத்து நிமிடத்துக்குள் சொன்னால் கூட போதும் அதன் பிறகு தான் குறும் படம் எடுக்க அரவம் வந்தது.

அதிக உலக பட விழா விருது வாங்கிய உங்களுக்கு எந்த விருது மறக்க முடியாது?

என்னை பொறுத்த வரை மக்களின் கருத்தே எனக்கு மிக பெரிய விருது , ஆரஞ்சு மிட்டாய் ட்ரைலர் பார்த்து பல பேர் என்னிடம் சிறப்பாக உள்ளது , நாங்கள் உங்கள் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்கிறோம் என்றார்கள் ...இது தானே ஒரு கலைஞனுக்கு வேண்டும் , ஆனால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் நியூ யார்க் நகரில் நடை பெற்ற ஒரு விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கு கொடுத்த விருது என்னால் மறக்க முடியாது

உங்கள் தாய் மொழில் மலையாளத்தில் எத்தனனை படம் செய்து உள்ளீர்கள்?

பிறந்தது , என்னை வளர்த்த விதம் என்னவோ மலையாளி யாக இருந்தாலும் கடைசி 20 வருடங்கள் நான் வெளிநாட்டில் தான் வாழ்ந்தேன் .. இருந்தாலும் எனக்கு அதிக மலையாள இயக்குனர்கள் நட்பு இப்போது வரை உள்ளது..

சிறு வயதிலிருந்தே மலையாள படங்களை விட தமிழ் படங்களே அதிகம் பார்ப்பேன் , இளையராஜா பாடல்களை அதிகம் கேட்பேன் என்னை பொறுத்த வரை தமிழ் படங்களில் நல்ல படைப்புகளை காண முடிகிறது .அதற்காக மலையாளம் உலகம் சலித்தர்வர்கள் அல்ல ,அங்கும் சிறந்த சினிமாக்கள் வருகிறது .எதோ ஒரு விஷயம் என்னை tamiliil ஈக்கிறது.

அப்பொழுது நீங்க லெடுத்த குறும்படத்துக்கு தற்போது வரும் குறும்படத்துக்கும் என்ன வித்தாயசம் பார்க்கிறீங்க?

கட்னிப்பக எந்த வித பெரிய மற்றுமும் நான் பார்க்க வில்லை என்றாலும் ,தொழில் நுட்பம் வகையில் தற்போது வளரந்துள்ளது ,கேமரா டெக்னாலஜி அதிகம் இப்போது ,நான் 20 வருடத்துக்கு முன்பு சார்தான கமெராவில் எடுத்தேன் அவ்ளோ தான் ... குறும் படத்தை பொறுத்த வரை அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் .. அந்த மாதிரி யான குறும் படங்கள் தற்போது வருகிறது

இந்த படத்தில் நீங்களே கதை , எடிட்டிங் , ஒளிப்பதிவு ? இது எப்படி?

முதலில் ஒரு இயக்குனராக என்னை தயார் படுத்தி கொண்டு தான் ஒளிப்பதிவை கற்றேன். பிறகு எனக்கு இது ரொம்பவும் எளிதாக இருந்தது , உங்கள் மனசில் இருக்கும் சில விஷயத்தை சில நேரங்களில் மற்ற ஒளிப்பதிவாளருக்கு தெரிவிக்க முடியாது , அதன் பிறகு ஒரு சில விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் நான் தான் செய்தேன்..அதனால் எனக்கு பெரிய சிரமமாக இல்லை ...அதற்காக எல்லாமே நான் தான் என்று இல்லை சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி தான் அதன் நான் முழுவதும் நம்புகிறவன் , ஆனால் இந்த படத்தில் எனக்கு இது தேவை பட்டது .

இன்றைய இயக்குனர்களுக்கு எதாவது சொல்ல விரும்பும் கருத்து

கருத்து சொல்ல நான் யார்? அணைத்து திரைப்படங்களுமே ஒரு இயக்குனருக்கு சவால் தான், அதில் இவர் சீனியர், அவர் ஜூனியர் என்ற பாகுபாடு இல்லை உங்கள் மனது என்ன சொல்கிறது, அதை செய்யுங்கள். இன்னும் அட்வைஸ் சொல்ற அளவுக்கு நானும் வளரவில்லை.

எதிர்கால படங்கள்?

ஆரஞ்சு மிட்டாய் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைகிறேன். விஜய் சேதுபதி பிஸியாக உள்ளதால் எப்போது தொடங்குமென்று தெரியவில்லை.

Post a Comment

 
Top