GuidePedia
Latest News

0


Flag_of_Israel.svgபுத்தர் சின்னம் பொறிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்திருந்து கடற்கரையில் உல்லாசத்தைக் களித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொத்துவில் பொலிஸார் இரண்டு இஸ்ரேலியர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் அறுகம்மைக் கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வந்திருந்த இஸ்ரேல் டிமோனா பிரதேசத்தைச் சேர்ந்த எலியர் பென் சுஷான் யோசப் (ELIOR BEN SHUSHAN YOSEF) மற்றும் அவரது துணைவியாரான பென் ஆப்ராமோவிச் (BEN ABRAMOVICH) ஆகியோரே புத்தருக்கும், பௌத்த மதத்துக்கும் அவமானம் ஏற்படுத்தியதாக குற்றச் சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களாகும்.
புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சீலை விரிப்பில் அமர்ந்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தங்களுக்குத் தெரியாதென்றும், தாங்கள் இந்தியாவில் உல்லாசப் பயணிகளாக சென்றிருந்த பொழுது இந்த விரிப்பை வாங்கியிருந்ததாகவும், இந்தியாவில் இது ஒரு குற்றச் செயல் அல்ல என்றும் தாங்கள் அறிவதாக அவர்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top