இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கான 22 ஆயிரம் கோடி ரூபாவை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. புதுடில்லியின் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை எந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கில் மத்திய தரை வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டத்திற்காமைய இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் கட்டும் திட்டத்துக்கு கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தில் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழிப் பாலங்களும், கடலுக்கு அடியில் சுரங்கங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு பாதை அமைப்பது மூலம் சார்க் நாடுகள் அனைத்தும் தரைவழிப்பாதையினூடாக இணைக்க வழி ஏற்படும். மேலும் நாடு முழுவதும் 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும்.
நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறைகளில் ஒரு இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதின் கட்கரி மேலும் தெரிவித்தார்.
Post a Comment