GuidePedia
Latest News

0


Jameel (1)பொதுத் தேர்தல் வேட்பு மனுக்காலம் நிறைவடைய இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் களம் கடும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
முகா மற்றும் அ.இ.ம.கா போன்ற கட்சிகள் தேர்தல் களத்தை திடுதிப்பென சூடாக்கி வருகின்றன. அதிலும் அ.இ.ம.காவின் தேர்தல் களம் இதர கட்சிகளுக்கு பெரும் ஆவலையும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருவதாக அறியமுடிகின்றது.
அ.இ.ம.கா 03 மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
பொதுத் தேர்தலில் கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அக்கட்சி தனித்து போட்டியிடலாம் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இவ்விரு மாவட்டங்களினதும் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதில் அக்கட்சி பெரும் தர்ம சங்கடமான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அறியவருகின்றது.
அம்பாறை மற்றும் கண்டி மாவட்ட வேட்பு மனுக்களில் பெயர் குறிப்பிடப்பட வேண்டிய எண்ணிக்கையையும் விட அதிகமான முக்கியஸ்தர்கள் அ.இ.ம.காவில் இணைந்து வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளமையே மேற்படி தர்மசங்கடமான சூழ்நிலைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐதேக என்பனவற்றின் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் எம்பிக்கள் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் என பலர் அ.இ.ம.காவுடன் அடுத்து வரும் மணி நேரங்களுக்குள் இணைந்து கொள்ளலாம் என பரவலாக அரிசயல் களத்தில் பேசப்பட்டு வரும் இத்தருணத்தில் அக்கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீன் இம்மாவட்ட வேட்பு மனுவை பூர்த்தி செய்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கிழக்கு மாகாண சபையின் முகா உறுப்பினர் ஜெமீல் அ.இ.ம.கா வில் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தற்போது அக்கட்சித் தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது தலைமையில் முகா மற்றும் ஐ.தே.கவின் மிக முக்கிய உறுப்பினர்கள் அடங்கலாக 10 பேரைத் தெரிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தற்போது பரபரப்புடன் ஈடுபட்டு வருவதாக அறியவருகின்றது.
அதே வேளை மத்திய மாகாண சபை உறுப்பினரான கண்டியைச் சேர்ந்த லாபீர் ஹாஜியார் அ.இ.ம.காவில் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
மு.கா தலைவர் ஹக்கீமுக்கு ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியதினால் லாபீர் ஹாஜியார் அக்கட்சி மீது அதிருப்தியுற்று அ.இ.ம.காவில் இணையவுள்ளதாக லாபீர் ஹாஜியார் தரப்பு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வேட்பு மனுவை பூர்த்தி செய்வதில் அம்பாறை மாவட்டத்தில் ரிசாத் பதியுதீன் எதிர்நோக்கும் நெருக்கடியைப் போன்றே கண்டி மாவட்ட அ.இ.ம. கா வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதிலும் அவர் தர்மசங்கடத்தை எதிர்கொண்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் மு.கா என்பனவற்றைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களும் ,சிரேஷ்ட பிரமுகர்களும் ரிசாத் பதியுதீனுடன் மிக இரகசியப் பேச்சுவார்த்தைகளை நேற்று நள்ளிரவுக்கு பின் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து மேற்கொண்டதாக அ.இ.ம.கா தரப்புத் தகவல்களிலிருந்து நம்பகரமாக தெரியவருகின்றது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவரது கட்சி சார்பாக களமிறக்கும் வேட்பாளரகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க கண்டி மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் தற்போது முன்வந்திருப்பதாகவும் இதனால் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அ.இ.ம.கா பெரும் செல்வாக்கை பெற்று வருவதாகவும் குறிப்பாக கண்டி மாவட்ட கல்விமான்கள் அ.இ.ம.கா வை பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகவும் கண்டி பிரதேசங்களில் கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முகா என்பனவற்றிலிருந்து எவருமே எதிர்பார்த்திராத முக்கிய ஒருசிலர் பிரமுகர்கள் அ.இ.ம.கா வுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைவதற்கு முன்னர் எந்த வேளையிலும் இணைந்து கொள்ளலாம் என கொழும்பு அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top