GuidePedia

0



இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு சங்கக்கார முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் மட்டுமே தான் இறுதியாக விளையாட இருப்பதாக சங்ககார அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இலங்கை மற்றும் இந்திய டெஸ்ட் தொடர் போட்டி அட்டவணையை இந்தியாவின் விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான சோனி சிங்ஸ் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளோடு சங்கக்கார கிரிகெட் உலகிலிருந்து இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிகெட் அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற காரணமாகவிருந்தவர் என்பதால் அவரை கௌரவமான முறையில் வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .(ச- மு)

Post a Comment

 
Top