GuidePedia

0



எவரிடம் அடிப்பணியாத மற்றும் வளைந்து கொடுக்காத அரசியல் முறையை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் எனவும் திருடர்களை உருவாக்காத அரசியல் முறை ஒன்று நாட்டுக்கு அவசியம் எனவும் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இளைஞர்களுக்கு வாக்களியுங்கள் என்ற தலைமைப்பில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சுஜீவ சேனசிங்க,
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகளவில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டாலும் இலங்கையில் இந்த நிலைமை குறைவாக உள்ளது.
பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இளைஞர்களுக்கான சந்தர்ப்பத்தையும் அதிகரிக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியிலும் திருடர்கள் உருவாகலாம்.
திருடர்கள் உருவாக அரசியல் முறை நமக்கு தேவைப்படுகிறது. நாம் யாரிடமும் மண்டியிடக் கூடாது. வளைந்து கொடுக்கக் கூடாது.
முன்பிருந்த அரசாங்கங்களிடம் மண்டியிட்டனர் அல்லது வளைந்து கொடுத்தனர். வளைந்து கொடுக்காவிட்டால், பணியாற்ற விடமாட்டார்கள் என்றார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyHSUSUew5C.html#sthash.JhA9hvgL.dpuf

Post a Comment

 
Top