GuidePedia

0
நீர் செய்த காட்டிக் கொடுப்பு காரணமாக நாடு இரத்த காடாக மாறும்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளார்.
“மைத்திரி நீர் செய்த இந்த பாரிய காட்டிக்கொடுப்பால் நாடு இரத்த காடாக மாறும். நீர் இப்படி துரோகியாக மாறுவீர் என்று எண்ணியிருந்தால், நான் உம்மை பொது வேட்பாளராக நிறுத்தியிருக்க மாட்டேன்” என நேரடியாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, கடும் அதிருப்தியில் நேற்றிரவு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மைத்திரியை இவ்வாறு சாடும் போது அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச உட்பட மோசடியாளர்களுக்கு வேட்புமனுவை வழங்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால கடந்த 5ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வீட்டில் வைத்து அவருக்கு உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து மோசடியாளர்கள் அற்ற வேட்பாளர் பட்டியல் ஒன்றை தயாரித்து சந்திரிக்கா கடந்த 7 ஆம் திகதி அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். 33 பேருக்கு வேட்புமனுவை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா வழங்கிய வேட்பாளர் பட்டியலை குப்பையில் எறிந்து விட்டு, மகிந்த ராஜபக்ச உட்பட மோசடியாளர்களுக்கு அனுமதியை வழங்கியதுடன் சந்திரிக்காவின் முயற்சியை எட்டி உதைத்துள்ளார்.
இதனையடுத்து 12 பேரின் பெயரை குறிப்பிட்டு இவர்களுக்கு வேட்புமனுவை வழங்காது, கட்சியை சுத்தப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் இருந்த 4 பேருக்கு மாத்திரமே அனுமதி மறுத்துள்ளார்.
சஜின் வாஸ் குணவர்தன, மேர்வின் சில்வா, துமிந்த சில்வா மற்றும் சரண குணவர்தன ஆகிய 4 பேருக்கு மாத்திரமே வேட்புமனு வழங்க மறுக்கப்பட்டது.
பண்டாராநாயக்கவினர் கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புனிதப்படுத்த கிடைத்த இறுதி சந்தர்ப்பத்தையும் மைத்திரி எட்டி உதைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

Post a Comment

 
Top