வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தாம் தமது ஆட்சியில் தவறிழைத்த அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பெயர்களை வெளியிடவேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்விக்கண்டதன் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தாம் பிழைசெய்த அமைச்சர்களையும் பிரதியமைச்சர்களையும் காப்பாற்றியதாக மஹிந்த தெரிவித்திருந்தார்.
அத்துடன் குற்றவாளிகளை விடுதலை செய்ய உதவியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமது வேட்புமனுவை தாக்கல் செய்யும் முன்னர் மஹிந்த அந்த நபர்களை வெளிப்படுத்தவேண்டும் என்று ரோசி கோரியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவும் அவரின் சகாக்களும் நாட்டின் வளங்களை கொள்ளையிடுவதற்காக மீண்டும் ஆட்சிக்கு வரமுனைகின்றனர்.
தம்மீது மோசடி தடுப்பு பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே மஹிந்தவை பிரதமராக்க அவர்கள் முனைகின்றனர்.
எனினும் மகிந்த பிரதமராவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி இடமளிக்காது என்றும் ரோசி குறிப்பிட்டார்.
Post a Comment