GuidePedia

0





















வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
இதில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வருகிற 10ம் திகதி நடக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் ஆடவில்லை.
உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதனால் முதல் ஆட்டத்தில் அவர் விளையாட இயலாது. ஆனால் அவர் ஒருநாள் தொடரில் இருந்து முழுமையாக ஆடவில்லை. நிர்வாகமும் அவரை அணியில் இருந்து விடுவித்தது.
இதைத் தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஹசிம் அம்லா தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top