GuidePedia

0


அமெரிக்காவில் உள்ள உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹாவாட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ் பீடம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.

ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலேயே குறிப்பிட்ட தமிழ் பீடம் ஆரம்பிக்கப்பட்வுள்ளதாக இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டொக்டர் விஜயராகவன் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

அவரும் அவரது சக நண்பர் திருஞானசம்பந்தனும் சேர்ந்து ஒரு மில்லியன் டொலர்களை இதற்காக வழங்கியுள்ளதாகவும், மீதி ஐந்து மில்லியன் டொலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெருவித்துள்ளார்.

இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை ஹாவாட் பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதாகவும் டொக்டர் ஜானகிராமன் கூறியுள்ளார். (ஸ-மு)

Post a Comment

 
Top