GuidePedia

0



புகலிடம் கோரி வந்த சுமார் 100 உய்குர் முஸ்லிம்களை சீனாவுக்கு நாடு கடத்தியதாக தாய்லாந்து நேற்று அறிவித்தது.

மேற்படி நடவடிக்கையை சர்வதேச சட்டத்தை மீறும் செயலாக மனித உரிமைகள் அமைப்புக்கள் கருதுகின்றன.

அதேவேளை 170 க்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்களை அவர்கள் துருக்கியர்கள் என்று கண்டறியப்பட்ட பின் துருக்கி நாட்டுக்கு தாய்லாந்து நாடு கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தாய்லாந்தின் செயற்பாட்டை கண்டித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், இவர்கள் மீண்டும் சீனாவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு இலக்காக கூடும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளதோடு, இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் தாய்லாந்து மீது குற்றம் சுமத்தி உள்ளது.

இதே போன்றே இதற்கு முன்னர் தமது நாட்டில் அடக்கு முறைக்கி உள்ளாகி புகலிடம் கோரி ஆபத்தான பயணங்களை கடந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்களையும் தாய்லாந்து நாட்டில் நுழைய விடாது தடுத்து கடலில் தத்தளிக்க விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ம|ஸ)

Post a Comment

 
Top