ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பெற்ற வெற்றியை மறுபக்கம் திருப்பி விடுவதற்கு எந்த தரப்புக்கும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அந்த வெற்றியை பெற கைகோர்த்த அனைவரும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த காலத்தை நோக்கி செல்வதா இல்லையா என்று மக்களே தீர்மானிக்க வேண்டும். குடும்ப ஆட்சிக்கு செல்வதா, வரையறையற்ற ஊழலுக்குள் செல்வதா என்பதை மக்களே தீர்மானிக்கவேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதி நாம் பாரிய வெற்றியை பெற்றோம். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பாதுகாத்து முன்னோக்கி செல்லவே அந்த வெற்றியை மக்கள் வழங்கினர்.
இந்த வெற்றியை பின்நோக்கி நகர்த்த சிலர் முயற்சித்து வருகின்றனர். அன்று சர்வாதிகார ஆட்சியை ஒழிக்க ஒருங்கிணைந்த அனைத்து சக்திகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தற்போது ஒன்று சேர்ந்துள்ளன எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment