GuidePedia

0


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 255 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரேயில் தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச முடிவு செய்தது.

இதனால் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக ரஹானே, தமிழக வீரர் முரளி விஜய் களமிறங்கினர்.

இதில் 9 பந்துகளை சந்தித்து 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் முரளி விஜய். இதனையடுத்து ரஹானே, ராயுடு நிதானமாக விளையாடினர்.

ரஹானே 34 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திவாரி திணற ஆரம்பித்தார். இவர் 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

உத்தப்பா நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அவர் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஓட்ட முறையில் வெளியேற்றப்பட்டார்.

கெடார் ஜாதவும் (5) நிலைக்கவில்லை. இதன் பின்னர் ராயுடு உடன் ஜோடி சேர்ந்த பின்னி நிலைத்து நின்று ஆடினார். அதே போல் ராயுடு நிதானமாக விளையாடினார்.

இவர்களின் பொறுமையான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

பின்னி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இவர் 76 பந்தில் 77 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 2 சிக்சர்)எடுத்தார்.

மறுமுனையில் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடிய ராயுடு சதம் அடித்தார்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 255 ஓட்டங்கள் எடுத்தது.

ராயுடு 124 ஓட்டங்கள் (12 பவுண்டரி, 1 சிக்சர்), அக்சர் படேல் 2 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.






Post a Comment

 
Top