GuidePedia

0



இந்தோனேசியாவின் கிழக்கே உள்ள ருவாங் சிகரதில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் காரணமாக மூன்று விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி விமான நிலையங்கள் இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலி உட்பட மூன்று தீவுகளிளே அமையப்பெற்றுள்ளன.

எரிமலை சீற்றத்தின் ஆரம்பத்தில் ஐந்து விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் லொம்போக் தீவிலுள்ள இரண்டு விமான நிலையங்கள் தற்போது மீளவும் திறக்கப்பட்டுள்ளன.

எரிமலையிலிருந்து பரவவுகின்ற சாம்பல் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் பாலிக்கு இடையிலான விமானப் போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் பல நாட்களாக இரத்துச் செய்யபட்டடுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. (ஸ -மு)

Post a Comment

 
Top