சவுதி அரேபியாவின் கடந்த கால வரலாற்றை கூர்ந்து கவனிப்பவர்கள் சவுதி அரேபியா ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்ப்பில் இருந்தது இல்லை என்பதையும் சவுதி அரேபியாவிர்கும் அமெரிக்காவிர்கும் நெருக்கமான உறவுகள் இருந்ததையும் அறிந்து கொள்வர்
இந்த நிலை மன்னர் சல்மான் சவுதி அரேபியவின் ஆட்சிபீடத்தை அலங்கரிக்க ஆரம்பித்த பிறகு மாற தொடங்கியது
நீண்ட நெடுங்காலமாக சவுதி அரேபியாவின் உயர் நிலை அரசு பொறுப்பில் உள்ளவர் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றது இல்லை
தர்போது மன்னர் சல்மானுக்கும் ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட தொலை பேசி உரையாடலுக்கு பிறகு இளவரசர் முஹம்மது பின் சல்மானை சவுதி மன்னர் சல்மான் ரஷ்யா அனுப்பி வைத்திருக்கிறார்
சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானின் ரஷ்ய பயணம் ஈரான் மற்றும் சிரியாவின் ஆட்சியாளர்களை நடுங்க வைத்திருப்பது போல் அமெரிக்க ஆட்சியாளர்களையும் நடு நடு நடுங்க வைத்திருப்பதாக அமெரிக்க பத்திரிகைகள் கூறியுள்ளன
ஈரானுக்கும் சிரியாவிர்கும் பக்கபலமாக இருந்து வரும் ரஷ்யாவின் நிலையில் மாற்றத்தை கொண்டுவருவதர்கே இந்த பயண ஏர்பாட்டை சவுதி அரேபியா மேர்கொண்டிருப்பதாக மத்திய கிழக்கின் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
சிரியாவில் சவுதியின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய படைகள் தொடர்ந்து முன்னேறி கொண்டிருக்கும் நிலையில் சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மானின் ரஷிய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது
இந்த பயணத்தில் மூலம் அணுஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட ஆறு முக்கிய ஒப்பந்தங்களை ரஷ்யாவுடன் சவுதி அரேபியா செய்திருக்கிறது
Post a Comment