அமெரிக்க ஜனாதிபதி உலகவாழ் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து மக்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு நானும் எனது மனைவி மிச்செலும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என ஒபாமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை இப்தார் நிகழ்வுக்காக முஸ்லிம்கள் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த அழைப்பின் மூலம் அமெரிக்க சமூகங்களின் பன்முகத் தன்மை மற்றும் தேசப்பற்றும் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் தமது வழிபாட்டு சுதந்திரத்தை அனைவரும் மதித்து பகிர்ந்துகொண்டமையும் என்னுள் மீளவும் நினைவூட்டப்படுகிறது. இது போன்ற நிகழ்வை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியும் ரமழான் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். பர்மா,ஈராக் லிபியா,நைஜீரியா,சோமாலியா,சிரியா போன்ற நாடுகள் உட்பட பல நாடுகள் நாள் தோறும் வறுமையால் வாடுகின்றன. அதை வெளிப்படுத்தவே மீண்டும் ரமழான் பிறந்திருக்கிறது. இது நிச்சயம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜோன் கெர்ரி கூறியுள்ளார்.
மேலும் ரமழான் மாதமானது சுய பரிசோதனை மற்றும் மார்க்க பக்தியை அதிகபடுத்துவதற்கான நேரமாகும். இத்தினத்தில் முஸ்லிம்கள் அதிகமாக பிரார்த்தணை செய்தல்,குர்ஆன் ஓதுதல்,ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் தவறான நடத்தைகளிலிருந்து தம்மை விலக்கி கொள்ளவேண்டு மெனவும் தெரிவித்துள்ளார்.
நஸார் இஜாஸ்
Post a Comment