பாராளுமன்றம் செல்வதென்றால் கண்டி மாவட்டத்திலிருந்துதான் செல்வேன் என்ற வாக்குறுதியினை நான் காப்பாற்றியே ஆகுவேன்.
அது மட்டுமல்லாமல் வேறு மாவட்டத்துக்குச் சென்று ஒரு போதும் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என தெரிவித்தார் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி.
கண்டி மாவட்ட மக்கள் கூடவே இருந்து எனக்குத் தேவையான ஆதரவினை தருவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது என மேலும் தெரிவித்த அவருடனான விரிவான நேர்காணல்:
அஹமட் இர்ஸாட்:- கொழும்பினை பிறப்பிடமாக கொண்டு அரசியல் வாழ்க்கையினை ஆரம்பித்த நீங்கள் மீண்டும் கொழும்பில் தேர்தலில் களமிறங்கும் என்னங்கள் கிடையாதா?
அசாத் சாலி:- அசாத் சாலிஹ் என்றால் சொல்வதை செய்பவன். அதே போன்று சமூதாயம் என் மேல் அதிக நம்பிக்கையினை வைத்துள்ளது அதனை பாதுகாத்து அவர்களுடைய எதிர்பார்புக்களை நிறைவேற்றுவதானது எனது கடமையாகும். கொழும்பினை எடுத்துக் கொண்டால் நான் அரசியல் ரீதியாக எதனை செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்துள்ள திருப்தி என்னிடம் இருக்கின்றது. அதே போன்று நான் பிரதி மேயராக உள்ள காலகட்டத்திலும் என்னால் முடிந்த அபிவிருத்திகளை கொழும்புக்கு செய்துள்ளேன். ஆனால் என்னை கெளரவப்படுத்தி என்னை மத்திய மாகாண சபைக்கு அனுப்பிய கண்டி மாவட்டத்து மக்களை என்னால் மறக்க முடியாது.
அஹமட் இர்ஸாட்:- அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுக்கின்ற முடிவுடன் இருக்கின்றீர்கள்? அவாறு போட்டியிடுவதேன்றால் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவீர்கள்?
அசாத் சாலி:- முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான பிரச்சனைகளை தலைவிரித்தாடிய கடந்த கால அரசாங்கத்தினுடைய காலத்தில் கண்டி மாவட்டத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் மாவட்டத்தை விட்டும் வெளியில் மெளனித்து இருந்த நிலையில் நான் கண்டியில் தேர்தலில் களமிறங்க நினைத்த போது கண்டி மாவட்டத்து மக்கள் என்னிடம் கேட்டதெல்லாம் நீங்களும் எங்களை விட்டு சென்று விடுவீர்களா? என்றுதான். அதற்கு நான் கொடுத்த பதில் என்ன நடந்தாலும் கண்டி மாவட்டத்தை விட்டு அசாத் சாலிஹ் வெளியேற மாட்டான் என்ற வாக்குறுதியினை வழங்கியிருதேன். அந்த வகையில் நான் எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுக்கின்ற வாய்புக் கிடைத்தால் கண்டி மாவட்டத்திலேதான் போட்டியிடுவேன் என்பது எனது இறுதி முடிவாகும்..
அஹமட் இர்ஸாட்:- நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தேசிய ரீதியில் சகல பிரதேசங்களிலும் மைத்திரிபால சிறிசேனவுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டீர்கள். அந்த வகையில் இன்று ஆட்சிமாற்றம் ஏற்படுதப்பட்டு ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா?
அசாத் சாலி:- ஆட்சி மாற்றம் ஏற்படுதப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் நான் ஜனாதிபதியிடத்திலேயோ அல்லது பிரதமர் ரணிலிடமோ எனக்காக ஒன்றும் கேட்டதில்லை. அவர்களிடத்தில் நான் எப்போதாவது சென்றிருக்கின்றேன் என்றால் சமூதயத்தின் நலனுக்காககத்தான் சென்றிருக்கின்றேன். முஸ்லிம் சமூதாயத்தை எந்த அரசாங்கத்திடமும் பிச்சை எடுக்கின்ற சமூதாயமாக முஸ்லிம் சமூதாயத்தை நான் பார்க்கவில்லை. மைத்திரிபாலாவும் ரணிலும் முஸ்லிம்களுக்கு குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு இதுவரைக்கும் ஏதும் செய்துவிடவில்லை. அவர்கள் செய்யவும் தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு கடமையிருக்கின்றது வாக்களித்த மொத்த முஸ்லிம்களினதும் உரிமைகளை பாதுக்காக்க. அந்த வகையில் நாங்கள் இருக்கின்ற அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடன் எங்களது அரசியலை மேற்கொண்டு வருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ள உங்களால் கூறமுடியுமா? பாராளுமன்ற தேர்தல் எப்போது வரும் என?
அசாத் சாலி:- புதிய பாராளுமன்றம் வருக்கின்ற செப்டம்பர் மாதம் அமைக்கப்படலாம் என ஜனாதிபதி கூறியுள்ளார். ரணில் விக்ரசிங்க பாராளுமன்றத்தில் சமர்பிதுள்ள தேர்தல் முறைமையானது நிச்சயமாக முஸ்லிம்களை பாதிக்கக்கூடிய விடயமாக இருக்கின்றது. ஆகவே இருபதாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அதன் மூலம் எடுக்கப்படுக்கின்ற முடிவின் அடிப்படையிலும், சிறுபான்மை சமூகத்தை பாதிக்காத வகையிலும் மிகவிரைவில் இந்த வருடத்துக்குள் தேர்தல் ஒன்றின் மூலம் புதிய பாராளுமன்றம் அமைக்கப்படலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தீர்கள்.அந்தவகையில் கிழக்கு மாகாண மக்களுக்காக அரசியல் ரீதியில் எதனையும் செய்துள்ளீர்களா?
அசாத் சாலி:- கிழக்கு மாகாணத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் என்னிடமே வருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருப்பவர்கள் அமைச்சர்களாக தொழிப்படுவதை விட்டு புறோக்கர்களாகவே செயற்படுக்கின்றனர். சாதாரண அரசாங்க தொழில் ஒன்றினை வழங்கிவிட்டு இலட்சக்கணக்கில் எதிர்பார்க்கின்றனர். முக்கியமாக ஒன்றைக் கூறிக்கொள்ள விருப்புக்கின்றேன். கல்முனையில் உள்ள அஸ்ரப் வைத்திய சாலைக்கு வரவேண்டிய விபத்துக்களுக்கான தனியான பிரிவினை தயாரத்ன வேறுபிரதேசத்துக்கு கொண்டு செல்லமுற்பட்ட வேலையில் ஜனாதிபதியுடன் நான் கதைத்து மீண்டும் அஸ்ரப் வைத்திய சாலைக்கு கிடைக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளேன். அந்த வகையில் கிழக்கு மாகாண மக்களையும் எனது சகோதரர்களாகவே எனது மூச்சு இருக்கும் வரைக்கும் எனது மனதில் இருப்பார்கள்.
அஹமட் இர்ஸாட்:- சிங்கள பெரும்பான்மை மக்கள் உங்களை ஒரு இனவாதியாக பார்க்கின்றார்களே?
அசாத் சாலி:- சிங்கள மக்களை பொறுத்தமட்டில் தொன்னூறு வீதமான மக்கள் நல்லவர்கள். அவர்களுடன் எதையும் பயமில்லாமல் செய்து கொள்ளலாம். ஆனால் பத்து வீதமாக இருக்கின்ற இனவாதம் பேசக்கூடிய மக்களால்தான் இவ்வாறன கருத்துக்கள் வெளியிடப்படுக்கின்றன. நான் சமூகத்தின் உரிமைகளுக்காகவே குரல் கொடுக்கின்றேன். எனது அரசியலும் அவாறே அமைந்துள்ளது. அதனையிட்டு நான் பெருமைப்பட்டுகொள்கின்றேன். நான் கண்டியில் கடந்த மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட நினைத்த வேலையில் கண்டி அஸ்கிரி பீடத்துக்குச் சென்று அங்குள்ள சிங்கள் மதகுருமார்களின் அபிப்பிராயம் கேடவேலையில் அவர்கள் எனக்களித்த வரவேற்பும் ஆதரவும் அளப்பெரியது. அந்த வகையில் நான் இவ்வாறான சில்லரை விடயங்களை கருத்தில் எடுக்கப்போவதில்லை.
அஹமட் இர்ஸாட்:- அரசாட் சாலிஹ் என்றால் ஊடகங்களை நம்பித்தான் அரசியல் செய்யக்கூடியவர் என்ற பரவலான குற்றச்சாட்டுக்கு நீங்கள் எதைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
அசாத் சாலி:-நான் எந்த ஊடகத்தையும் தேடிப்போவதில்லை. ஊடகங்கள்தான் என்னை தேடி வருக்கின்றன. அந்த வகையில் நாட்டில் எத்னையோ அரசியல் வாதிகள் இருக்கதக்க என்னுடைய கருத்துக்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டு அதனை ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்கின்றது என்றால் என்னுடைய பேச்சில் அர்த்தமும் உண்மையும் இருப்பதனால்தான் அவ்வாறு இடம்பெறுக்கின்றது. அதனை பொறுத்துக்கொள்ளாதவர்களும், எனது அரசியல் எதிர்களுமே இவ்வாறன கருத்துக்களை பரப்பி வருக்கின்றனர்.
அஹமட் இர்ஸாட்:- ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் அரசியல் அறிமுகம் பெற்ற உங்களுக்கு தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் இருக்கின்ற நட்பு எவ்வாறு இருக்கின்றது?
அசாத் சாலி:- எனக்கும் ரணிலுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் கிடையாது. கடந்த ஜனாதிபதில் தேர்தலில் கூட நான் எங்கு செல்ல வேண்டும் என்பத்னை அறிவித்தது ரணில் விக்ரமசிங்கதான். எனக்கு எந்த நேரத்திலும் ஜனாதிபதியையும், ரணிலையும் தொலை பேசியில் எடுத்துக்கொள்ள முடியும். ஏன் என்றால் அவர்களுகு தெரியும் அசாத் சாலியின் தொலைபேசி அலருக்கின்றது என்றால் சொந்த தேவைக்காகவன்றி சமூகத்தின் முக்கியமான தேவைக்காகத்தான் அசாத் அழைக்கின்றான் என்று அவர்கள் எனது தொலை பேசிக்கு பதிலளிக்கின்றனர். ஆகவே எனக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அல்லது அதன் தலைமக்கும் பிரச்சனைகள் எதுவும் கிடையாது என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- ஹஜ் விடயம் சம்பந்தமாக நாட்டில் இடம் பெறுக்கின்ற பிரச்சனைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அசாத் சாலி:- சிறுகச் சிறுக ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் அதற்கு செலவாகும் தொகையான மூன்டரை இலட்சம் ரூபாய்களையும் சேர்த்து கொண்டு ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்லத்தயராகும் வேலையில் அமைச்சர் ஹலீம் ஏழு இலட்சம் ரூபாய்கள் தேவை என்று சொல்வாரானால் அந்த தொகையினை சேர்த்தவர் மீண்டும் ஐந்து வருடங்கள் பணத்தினை சேர்க்கும் நிலைமைக்கு தள்ளப்படுக்கின்றார். இதுதான் இன்று நாட்டில் நடக்கும் முக்கிய வியாபாபாரமாகும். நான் கடந்த காலத்தில் ஹஜ் விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது இந்த நட்டு மக்களுக்கு நன்றகத் தெரியும். அந்தவகையில் அல்லாஹ்வின் தண்டனைகள் இவர்களுக்கு வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
அஹமட் இர்ஸாட்:- இருபதாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவாக நீங்கள் செயற்படுவீர்களா?
அசாத் சாலி:- முஸ்லிம் சமூகத்தினை அது பாதிக்கும் என்றிருந்தால் நிச்சயமாக அதற்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. அது என்னுடைய தீர்மானகவும் உள்ளது. 225 பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தில் 25 முஸ்லிம் உறுப்பினர்களை உள்வாங்க முடியாத தேர்தல் முறை மாற்றமாக இருக்குமானால் அதனை நாங்கள் நிச்சயாக எதிர்ப்போம்.
அஹமட் இர்ஸாட்:- கிழக்கு மாகாண சபையில் அபிவிருத்துக்கு ஆளுனர் முட்டுக்கட்டையாக இருப்பதாக அதன் முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் பகிரங்கமாக குற்றம் சுமத்துகின்றார். நீங்களும் ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ற ரீதியில் குற்றச்சாடினை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
அசாத் சாலி:- அவருடைய குற்றச்சாட்டானது உண்மையாக இருக்கலாம். சாதரணமாக பார்ப்போமானால் எல்லா மாகாணங்களில்லும் ஆளுனரின் தலையீடுகள் அதிகமாகவே காணப்படுக்கின்றது. ஆனால் மறுபக்கத்தில் கிழக்கு மாகாண சபையினைப் பற்றிப்பேசுவதென்றால் இதுவரைக்கும் அங்கு பதவிவகித்துள்ள முதலமைசர்களையும், அமைச்சர்களையும் பற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஆகவே முதல் முதலமைச்சர்களைப்பற்றி சிந்தித்துவிட்டு அதற்குப் பிறகு ஆளுனரின் பிரச்சனைகளை ஆராய்வதே சிறந்தது என நினைக்கின்றேன்.
Post a Comment