ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இந்த அணி 2 முறை (2012, 2014) ஐ.பி.எல். கிண்ணத்தை வென்று முத்திரை பதித்தது. இந்த அணியின் உரிமையாளர்களாக நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா, அவரது கணவர் ஜெய் மேத்தா உள்ளனர்.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் 20 ஓவர் போட்டியில் விளையாடும் டிரினிடாட் அணியை ஷாருக்கான் வாங்கி உள்ளார்.
இதன் மூலம் வெளிநாட்டு 20 ஓவர் அணியை வாங்கிய முதல் உரிமையாளர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இது குறித்து ஷாருக்கான் கூறும்போது, கிரிக்கெட் துறையில் உலகம் முழுவதும் விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்காகும். இதனால் தான் டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கி உள்ளேன் என்றார்.
டிரினிடாட் அணியை கரிபியன் பிரிமியர் ‘லீக்’ போட்டியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் வெய்ன் பிராவோ, காலிஸ், டாரன் பிராவோ, போத்தா, கெவின் கூப்பர், கமரன் அக்மல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.
கரிபியன் பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் விளையாடும் போல்லார்ட் தலைமையிலான பார்படோஸ்டிரை டென்டீஸ் அணியை ஹாலிவுட் நடிகர் மார்க் ஹல்பெர்க்கும், கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணியை மற்றொரு ஹாலிவுட் நடிகர் ஜெரார்டு பட்லரும் ஏற்கனவே வாங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது ஷாருக்கான் இணைந்து உள்ளார்.
இந்த ஆண்டுக்கான கரிபியன் பிரீமியர் ‘லீக்’ 20 ஓவர் போட்டி வருகிற 20–ந் திகதி முதல் ஜூலை 26–ந் திகதி வரை நடக்கிறது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியை நடத்துகிறது.
Post a Comment