உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் மாத நோன்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில், 'கூகுள் ரம்ஜான் கம்பேனியன்' (https://ramadan.withgoogle.com//#/) எனும் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
முஸ்லீம்களுக்கு ரம்ஜான் மாதம் புனித மாதமாக அமைகிறது. இந்த மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லீம்கள் சரியான நேரத்தில் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த புனித மாதத்தில் முஸ்லீம்களுக்கு உதவும் வகையில் கூகுள், ரம்ஜான் தொடர்பான இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது. 'ரம்ஜான் கம்பேனியன்' (https://ramadan.withgoogle.com/#/) எனும் அந்த இணையதளத்தில், சரியான நேரத்தில் நோன்பை கடைப்பிடிக்க வசதியாக தினந்தோறும் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமனமாகும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய நேரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர இந்த புனித மாதத்திற்கான உணவுகளை செய்யும் முறைகள் மற்றும் பார்க்க கூடிய வீடியோக்கள் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறது. இப்தார் விருந்துக்கு குறித்த நேரத்திற்கு செல்லும் வகையில் பயணத்தை திட்டமிட, போக்குவரத்து தகவல்களையும் அளிக்கிறது.
மேலும், கூகுள் நவ் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள ஹலால் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கூகுள் தனது ஆன்ராய்டு பிளே ஸ்டோரில் ரம்ஜான் மாதம் தொடர்பான சிறப்பு செயலிகளை அடையாளம் காட்டும் 'வெல்கம்மிங் ரம்ஜான் 2015' எனும் பகுதியையும் துவக்கியுள்ளது.
-சைபர்சிம்மன்
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.