GuidePedia
Latest News

0







பெய்ஜிங்: சீனாவிலேயே முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணைய தளங்களில் அறிக்கை ஒன்றை சின்ஜியாங் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 
அதில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 


சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமலான் நோன்பிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 


இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் பிரிவினைவாதம் உருவாகக் கூடும் என்ற அச்சம் காரணமாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியும் சின்ஜியாங் அரசு நிர்வாகமும் மத நிகழ்ச்சிகளை தடை செய்வதாகக் கூறப்படுகின்றது. 


கடந்த 2009ஆம் ஆண்டில் சின்ஜியாங் மாகாணத் தலைநகரில் நடந்த மதக் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்தே ரமலான் நோன்பிருக்க முஸ்லீம்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top