பீஜிங், ஜூன் 20-
பேட்டரியால் இயங்கும் உலகின் முதல் மின் விமானத்தை(Electric Plane) தயாரித்து சீனா சாதனை புரிந்துள்ளது. விமானிகளுக்கான பயிற்சி, சுற்றுலா, வானிலை, மற்றும் மீட்புப்பணிகள் ஆகியவற்றிற்கு இந்த விமானம் பயன்படும். 14.5 மீட்டர் அளவில் நீளமான இறக்கைகள் கொண்ட இந்த விமானம் 3000 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.
பி.எக்ஸ் 1இ(BX1E) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் அதிகபட்சமாக 230 கிலோ வரையிலான எடையை சுமந்து செல்லும். இந்த விமானத்தை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சம் 160 கிலோ மீட்டர் வேகத்தில் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை பயணிக்க முடியும்.
சீனாவின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோனிங் பொது விமான அகடமியுடன் சென்யாங் விண்வெளி பல்கலைக்கழகம் இணைந்து இந்த விமானத்தை தயாரித்துள்ளதாக சீன ஊடகமான சின்குவா தெரிவித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த லியோனிங் ருக்சியாங் பொது விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த வகை விமானங்கள் இரண்டு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Post a Comment