அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்காதீர்கள்.ஏனனில், என்னைக் குறித்து யார் பொய் கூறுகிறாேரா அவர் நரகம்தான் செல்வார்.இந்த ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் அறிவித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுெமன்றே பொய்யுரைகிறாேரா அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று கூறியிருப்பதுதான் உங்களுக்கு நான் அதிக எண்ணிக்கையில் ஹதீஸ்கைள அறிவிக்கவிடாமல் தடுக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுெமன்றே பொய்யுரைக்கிறாேரா அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். இதை அபூஹுைரரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராய் இருந்தேபாது நான் (மஸ்ஜிது கூஃபா) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர் மீது நீங்கள்
கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என்மீது வேண்டுெமன்றே பொய்யுரைக்கிறாேரா அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று கூறுவைத நான் கேட்டுள்ளேன்.
Post a Comment