GuidePedia

0




பொதுத்தேர்தல் நெருங்கிவர வர சுவாரசியதிட்கு பஞ்சமே இல்லாமல் போகி கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னாள் உருவாக்கப்பட்டாலும் 30 வருடங்களுக்கு முன்னாள் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் போட்டிபோட்டு வளர்ந்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தமது கட்சியை போராட்ட களத்தில் இறக்கி தமது பலத்தை அரிய முற்படுவது சகலரும் அறிந்ததே..

அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை அம்பாறை மாவட்டத்தில் நிலை நிறுத்த செயலாளர் உட்பட அமைச்சர் ரிசாத்தால் பலர் நியமிக்கப்பட்டும் உள்ளனர். அந்தவகையில் கட்சியின் முக்கிய பதவிகள் பலதை அம்பாறை மாவட்டம் கொண்டிருக்கிறது. அதில் ஒருவரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சர்வதேச விவகார பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் தலைவர் ரிசாதால் நியமிக்கபட்டவர்தான் அன்வர் எம் முஸ்தபா .

இவர் கடந்த சில மாதங்களாக இந்த கட்சியை அம்பாறையில் நிலைநிறுத்த போராடி வருவதும் சந்து பொந்துகளில் எல்லாம் கட்சி விஸ்தரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதம் சகல ஊடகவாயிலாக முழு தேசமும் அறியும்.இவர் இந்த கட்சில் பொது தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது இருப்பினும் ஒரு முக்கிய விடயம் கசிய ஆரம்பித்துள்ளத கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால அவர்களை ஆதரித்து ஊடகங்கள் வாயிலாக மிக கூடுதலான பங்களிப்பை செய்திருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயம் அதேபோல் இவர் கடந்தகாலங்களில் அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே .கட்சியில் மிக முக்கிய செயட்பாட்டாளராக இருந்து வந்ததுடன் ஐ.தே .கட்சியில் மிக முக்கிய தலைவர்கள் பலருடனும் நல்ல உறவுகளை பேணிவரும் இவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வருமாறு ஒரு முக்கிய கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,

அது எந்த கட்சியாக இருக்கும் என்பது சந்தகமே. என்றாலும் எந்த பதவிக்கும் சோரம் போகாத இவர் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்காக உரத்து குரல் கொடுத்து வந்ததை நாம் அறிவோம் குறிப்பாக தமிழ் முஸ்லிம் உறவு வலுப்பெற வேண்டும் என குரல் கொடுத்ததோடு தமிழ் மக்களின் விடயங்களிலும் கவனம் செலுத்தியதை குறிப்பிடலாம் என்றாலும் இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் திடமான நம்பிக்கை கொண்டிருப்பதால் அந்த அழைப்புக்களை நிராகரிப்பார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொன்னாலும் அவரது எண்ணம் என்னவோ?

. வேட்பாளர் பட்டியல் நிறைவுக்கு வரும் தருணங்களில் கட்சி தாவல்கள் நடப்பது உலக வழமை. பொறுந்திருந்து பாப்போம் அன்வர் எம் முஸ்தபா கொண்டுவரபோவது மயிலா? யானையா? வெற்றிலையா? அல்லது வேறு ஒரு சின்னமா ?.

தகவல் சுழியோடி



Post a Comment

 
Top