புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்னரே தண்டனை வழங்கப்படுகின்றது. நான் அப்படி செய்தேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
தம்புத்தேகம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் மக்களை சந்தித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனது ஆட்சி காலத்தில் இவ்வாறு ஒரு நிலைமை காணப்படவில்லை.
நீதி என்பது அனைவருக்கும் சமமாக செயற்பட வேண்டும், நான் அவ்வாறே இந்த நாட்டை ஆட்சி செய்தேன்.
நான் 20 வருடங்களாக சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளேன். நீதிக்கமைய வழக்கு விசாரணை செய்த பின்னரே தண்டனை வழங்கினேன்.
ஆனால் இன்று தண்டனை வழங்கிய பின்னரே வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளும் நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது. நான் அப்படி செய்தேனா?
நான் மத ஸ்தலங்களுக்கு சென்று பூஜை வழிப்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமாவது தற்போதைய ஆட்சியாளர்களின் மனங்களில் உள்ள விரோதங்கள், கோபங்கள் நீங்கி அவர்களின் மனங்களில் சமாதானம் உருவாக வேண்டும் என பிரார்த்தனை செய்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச நாட்டில் தற்போது சுயாதீனமான நீதித்துறை செயற்படுகின்றதாக அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment