இன்று இரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூதூர் மத்திய குழுவின் கூட்டம் பலத்த முறுகலில் முடிவடைந்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூதூரிலிருந்து வேட்பாளரை களமிறக்குவதற்கென இடம்பெற்ற கூட்டமே இவ்வாறு முறுகலில் முடிவடைந்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென மூதூரிலிருந்து மொத்தம் ஏழு பேர்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவர்களில் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு சிலர் ஒத்துழைக்க முன்வராது கேள்விக் கணைகளைத் தொடுத்ததைத் தொடர்ந்தே சபை அமைதியிழந்து அல்லோல கல்லோலமாகியது.
இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை களமிறக்குவதற்கு ஒரு குழுவினரும் புல் மோட்டையைச் சேர்ந்தவரும் தற்போது மூதூரில் வசித்து வருபவருமான சமூக ஆர்வலர் ஏ. அமீனை களமிறக்குவதற்கு மற்றுமொரு குழுவினரும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.
எது எவ்வாறாக இருந்த போதும் மூதூரிலிருந்து ஏ. அமீனை களமிறக்குவதற்கு சாதகமான சூழ்நிலையே பெரும்பாலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment