
மேற்படி வீரமக்கள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நடைபெற்ற தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் சுவிஸ் வாழ் மாணவ. மாணவியருக்கான பரீட்சைப் போட்டி அன்றுகாலை 9மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது.
இதன் ஆரம்ப நிகழ்வாக பாலர் பிரிவுக்கான பாட்டுப் பாடுதல், கதை சொல்லுவது போன்ற நிகழ்வுகளை செல்வி. புஷ்பானந்தசர்மா ஷபானியா, செல்வி அரிராஜசிங்கம் ஆர்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
அத்துடன் கீழ்ப்பிரிவு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பரீட்சைகள் திருமதி. புனிதவதி ரட்ணகுமார், திருமதி தவச்செல்வி கருணாகரன், திருமதி. சந்திரா அரிராஜசிங்கம் ஆகியோரின் மேற்பார்வையில் திருமதி. சுகந்தினி சசீந்திரன், திருமதி புஷ்பானந்த சர்மா வதனாம்பாள், செல்வி கெங்காதரன் அபிநயா, செல்வி புஷ்பானந்தசர்மா ஷபானியா, செல்வி ஆர்த்திகா அரிராஜசிங்கம், செல்வி கேதாரணி ரட்ணகுமார், செல்வன் ரதீஸ்வரன் சயந்தன்,ஆகியோரின் கண்காணிப்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அன்றுமாலை 3மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் 26ஆவது வீரமக்கள் தினம் ஆரம்பமாகியது. இதனை செல்வி. கேதாரணி ரட்ணகுமார், செல்வி. புஷ்பானந்த சர்மா ஷபானியா ஆகியோர் ஆரம்பித்து வைத்து நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்கள்.
இதன் ஆரம்ப நிகழ்வாக திருமதி வில்வரட்ணம் கமலாம்பிகை, திருமதி சுகந்தினி ரதீஸ்வரன் (தீபன்), திருமதி புனிதவதி ரட்ணகுமார், திருமதி. தவச்செல்வி கருணாகரன் (பிரபா), புளொட் தோழர் சித்தா ஆகியோர் மங்கல விளக்கேற்ற நிகழ்வுகள் ஆரம்பமாக நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த வீரமக்களின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியருக்கான விநோதவுடைப் போட்டி முதலில் நடைபெற்றது. இதனைச் செல்வி. ஆர்த்திகா அரிராஜசிங்கம் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து பல நாட்டிய நடனங்கள், மேலைத்தேய நடனங்கள், சங்கீதப் பாடல்கள், பட்டிமன்றம் போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இவற்றை நடன ஆசிரியை திருமதி ஜெயவாணி குகராஜசர்மா அவர்கள் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வீரமக்கள் தின அறிக்கையை சுவிஸ்ரஞ்சன் அவர்கள் வாசித்தளித்தார்.
இதனை அடுத்து சூரிச் தமிழ் சங்கத்தின் சார்பில் திரு. ரட்ணகுமார் அவர்கள் உரையாற்றினார். அவர் தனதுரையின் போது, தற்கால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் சில விடயங்களை எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதற்கு முன்பதாக நடைபெற்ற நன்றியுரையினை சுவிஸ்ரஞ்சன் அவர்கள் வழங்கினார்.
அவர் தனதுரையில், "ஒரு வாரத்திற்கு முன்பாகவே வீரமக்கள் தினம் மற்றும் பரீட்சைப் போட்டி என்பன குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதையிட்டு நான் மிகவும் மனம் வருந்துவதுடன், இதற்கான அனைவரிடமும் மன்னிப்புக் கோரும் அதேவேளை இன்று இந்நேரத்தில் அதுவும் ஒரு வாரகால அவகாசத்துடன் ஒரு சில இணையங்களிலும், முகநூலிலும் நாம் அறிவித்த போதிலும், அத்தோடு சுவிஸில் இன்றையதினம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையிலும் இந்த வீரமக்கள் தின நிகழ்விலும் பலர் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எல்லோருக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்வரும் காலங்களில் நாம் நேரகாலத்தோடு எமது பரீட்சைப் போட்டி மற்றும் வீரமக்கள் தினம் தொடர்பாக சுவிஸ்வாழ் மக்களுக்கு அறிவித்து மிக சிறப்பாக நடத்துவோம் என தெரிவித்துக் கொள்ளுகின்றேன்" என்று தெரிவித்தார்.
"மற்றும் பல கலைநிகழ்வுகளை தந்து சிறப்பித்த செல்வி. கண்ணதாசன் சுவாதி, செல்வி. சபானியா புஸ்பானந்தசர்மா, செல்வி. சுபீர்ணா கருணாகரன், செல்வி. ரஷ்மியா ரதீஸ்வரன், செல்வி.லபிசா சிவானந்தசோதி செல்வி.அனுத்திகா அறிராஜசிங்கம், செல்வி. லக்சா சிவானந்தசோதி, செல்வி. பிரணகி வர்ணகுமாரன், செல்வி.கேதாரணி ரத்னகுமார், செல்வி.சஞ்சீவி ஜெயதீஸ்வரன், செல்வி. நவீனா கண்ணதாசன், செல்வி. சுப்ரயா புஸ்பானந்தசர்மா, செல்வி. யுவர்சிகா ஜெயச்சந்திரன், ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்".
அத்தோடு "மேற்படி வீரமக்கள் தின நிகழ்வு பரிசுப்போட்டி போன்ற நிகழ்வுகளுக்கு மண்டபம், கலைநிகழ்வு, சோடனை, சமையல் என பலவழிகளிலும் உதவிய அனைவருக்கும், குறிப்பாக திரு. முருகதாஸ், திரு. ஜெகநாதன், திருமதி. ஜெயகௌரி ஜெகநாதன், திரு. ரட்ணகுமார், திருமதி. புனிதவதி ரட்ணகுமார், திருமதி. சந்திரா அரராஜசிங்கம், திருமதி. தவச்செல்வி கருணாகரன் (பிரபா), திருமதி சுகந்தினி ரதீஸ்வரன் (தீபன்), திருமதி. சுகந்தினி சசீந்திரன், திருமதி கண்ணதாசன், திருமதி ராணி வர்ணகுமாரன், திருமதி வில்வரட்ணம் கமலாம்பிகை, திருமதி புஷ்பானந்தசர்மா வதனாம்பாள், திரு. கணபதிப்பிள்ளை மாஸ்டர், திரு. பற்றிக், திரு. பொலிகை ஜெயா, திரு. சிவயோகராஜா, திரு. செல்வராஜா மாஸ்டர், திரு. சிறீ (கைதடி), திரு. ரூபன் (குப்பிளான்), திரு. நாதன் (மயிலிட்டி), திரு லோகன் (முனியாண்டி விலாஸ்), திரு. நவம் (சோடனை), திரு. குட்வித்சிங், திரு. அலி(சவுண்ட்), செல்வன் ரதீஸ்வரன் சயந்தன், செல்வன் புவனேந்திரன் ஆகாஸ், செல்வன் கருணாகரன் சங்கீர்த், செல்வி கெங்காதரன் அபிநயா, செல்வி புஷ்பானந்த சர்மா ஷபானியா, செல்வி அரராஜசிங்கம் ஆர்த்திகா, செல்வி ரட்ணகுமார் கேதாரணி, தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களான மனோ, தீபன், வரதன், பிரபா, சிவா, சங்கர், புவி, தேவண்ணர், கந்தசாமி, செல்லப்பா, சித்தா, ரமணன், கைலாசநாதன், சௌந்தர்ராஜன், குமார் (பூர்க்டோர்வ்), யோகன் மற்றும் இதில் பெயர் குறிப்பிட மறந்தவர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதன் முதலாவதாக நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து வழங்கி, பல நாட்டிய நிகழ்வுகளை ஒழுங்கமைத்துத் தந்த நடன ஆசிரியை ஜெயவாணி குகராஜசர்மா அவர்களுக்கான சிறப்புப் பரிசினை திருமதி வில்வரட்ணம் கமலாம்பிகை வழங்கி சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்டிமன்றம் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்குமான பரிசில்களையும், அன்றுகாலையில் நடைபெற்ற பரீட்சை போட்டியில் வெற்றியீட்டிய, மற்றும் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களையும் புளொட் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்வுகள் யாவும் மாலை 9மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்று இனிதே நிறைவுற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.





































Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.