GuidePedia

0
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 110 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்றிரவு வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் பொருட்கள் விநியோகித்தல், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை ஒட்டுதல், அரச சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல் போன்ற முறைப்பாடுகள் அதிகம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
இதுதவிர தேர்தல் சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களில் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

 
Top