மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. நேற்றுமுன்தினம் மும்பைநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தமையினால் தாதர் மேற்கு, சானே குருஜிமார்க் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், மகாலட்சுமி சந்தி, பூலாபாய் தேசாய் மார்க், கோபால் தேஷ்முக் சந்தி உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளமையினால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளமையால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு மும்பை பல்கலைக்கழகத்தின் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Post a Comment