GuidePedia

0

                             news
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ்  தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக நாளைமறுதினம்  சபையில் விசேட விவாதம் நடாத்த அரசு தீர்மானித்துள்ளது. 
 
இந்த விவாதத்தின் போது அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பின்னர் அரச வர்த்தமானியில் வெளிவந்த புதிய தேர்தல் முறைமை சட்டவரைபு தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளும்  தமது நிலைப்பாடுகளைத் தெரிவிக்கவுள்ளன. 
 
மேற்படி விவாதத்தின் பின்னர் புதிய தேர்தல் முறைமைக்கு ஏற்புடையதாக 20  ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு திருத்தம் செயற்படுத்துவதற்கான வழிமுறைகள்  தீர்மானிக்கப்படும் என கூறப்படுகின்றது. 
 
இதேவேளை ,  அரச வர்த்தமானியில் வெளிவந்த புதிய தேர்தல் சட்டவரைபை தாம் முழுமையாக நிராகரிக்கின்றோம் என்றும்  தமது திருத்தங்களை அரசு ஏற்கா விடின் அந்த சட்டவரைபை சபையில் கடுமையாக எதிர்ப்போம் என்றும்  இரா. சம்பந்தன்  தலைமையிலான த.தே.கூ , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் மற்றும்  உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 
 
அத்துடன் நாளை கட்சித் தலைவர்களது கூட்டம் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

 
Top