GuidePedia

0



இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது Facebookகாகத் தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய Facebook கணக்கை செயலிழக்கச்
செய்ய நீங்கள் நினைக்கலாம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். உங்கள் கணக்கை யாராவது hack செய்தாலோ, தளதினால் நேரம் வீணாகச் செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட account வைத்திருப்பதால் ஒன்றைச் செயலிழக்க வைக்க நினைக்கலாம். இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். Facebook கணக்கை எப்படிச் செயலிழக்க வைப்பது எனப் பார்ப்போம்.
  • முதலில் Facebook தளத்திற்குச் சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பிறகு Account Settings பகுதிக்குச் செல்லுங்கள்.
  • Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும் அதில் Securityஐ  click செய்யவும்.

  • Security click செய்தவுடன் வரும் windowவில் கீழே இருக்கும் Deactivate your accountஐ click செய்யவும்.
  • அடுத்து இன்னொரு window வரும். அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில optionகள் காட்டும். அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.

  • Email opt out என்ற இடத்தில் Tick mark கொடுக்கவும் (டிக் பண்ணாமல் விட்டால் Facebookல் இருந்து Invitations, Notifications, Email வந்து கொண்டே இருக்கும்)
  • அடுத்து  Confirm buttonஐ  அழுத்தவும். அடுத்து இந்தக் கணக்கின் password கேட்கும். அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup window வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit buttonஐ அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதைப்  போல window வரும்.
  • உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது open செய்தால் கீழே கண்ட செய்தி தான் வரும்.  
 

Post a Comment

 
Top