மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாட்ஸ்ஆப்பின் அசுர வளர்ச்சியை கண்டு அதை பேஸ்புக் நிறுவனமே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த சில மதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப்பில், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன.
லைன், வைபர், டாங்கோ போன்ற மென்பொருள்களில் உள்ள பேசும் வசதி வாட்ஸ்ஆப்பில் இல்லை என்பது ஒரு குறையாவாக வாடிக்கையாளர் மத்தியில் நிலவியது. எனவே அந்த குறையை போக்கும் விதமாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.
Post a Comment