இவ்வசனத்தில் (34:12) ஸுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கூறுவதோடு நிறுத்திக் கொள்ளா மல் சராசரியாக காற்றின் வேகத்தையும் கூட அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.
நம் மீது வீசுகின்ற காற்று நம் மீது பட்டு, பூமியை ஒரு சுற்று சுற்றி வந்து மறுபடியும் நம் மீது பட வேண்டுமானால் அதற்கு சுமார் இரண்டு மாத காலம் தேவைப்படும். ஏனென்றால் சராசரியாக காற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்றது. இந்த வேகத்தில் வீசுகின்ற காற்று பூமியைச் சுற்றி வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும்.
இங்கே ஸுலைமான் என்ற இறைத் தூதருக்கு உரிய சிறப்பைச் சொன்னாலும் சராசரியான காற்றின் வேகத்தையும், பூமியின் சுற்றளவையும், பூமியுடைய சுழற்சி வேகத்தையும் கணக்கிட்டுப் பேசும் ஒரு விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் இதைப் பேசியிருக்கிறது.
இது நிச்சயமாக மனிதனின் சொல்லாக இருக்க முடியாது; இறை வனின் சொல்லாகத் தான் இருக்க முடியும் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.
Post a Comment