GuidePedia

0



இவ்வசனம் (55:33) விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற் கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.
ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.
அதே நேரத்தில் இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஏழு வானங்கள் வரை மனிதன் செல்ல முடியுமா என்றால் செல்ல முடியாது.
ஜின்கள், ஷைத்தான்கள், வானுலகச் செய்திகளை அறிந்து கொள்வதற்காக வானத்தை நெருங்கும் போது அவர் களைத் தீப்பந்தம் விரட்டும் என்பதை 307வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.
அது போலவே வானவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் அந்த இலக்கு வரை மனிதர்களால் செல்ல முடியாது; ஓர் அளவிற்கு மட்டுமே செல்ல முடியும் என்பதையும் சேர்த்து திருக்குர்ஆன் சொல்கிறது.
இதுவும் திருக்குர்ஆன் அல்லாஹ் வின் வேதம் தான் என்பதற்கான மற்றொரு சான்றாக இருக்கிறது.

Post a Comment

 
Top