நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி அளப்பரிய பங்காற்றும் நிலையில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் இன்றி கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.
இத்தகையதொரு நிலைமையே முல்லைத்தீவு கல்வி வலையத்திற்கு உட்பட்ட கொக்குத் தொடுவாய் அரசினர் கலவன் பாடசாலைக்கும் ஏற்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருகின்றது.
சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் கொட்டில்களில் கல்வி கற்று வருகின்றனர்.
கிடுகினால் வேயப்பட்ட கூரைகளின் கீழ் தமது கல்வி நடவடிக்கையினை மேற் கொள்ளும் போது மழை காலங்களில் பலத்த சிரமத்தினை எதிர்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாடசாலையில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பெற்றோர் அங்கலாய்கின்றனர்.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று உலகில் கூறப்படும் நிலையில் தமது எதிர்காலத்தினை தீர்மானிக்கும் பிரதான சக்தியான கல்வி கிடைக்காமல் இருப்பது கவலைக்குரியதே..
Post a Comment