அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான நேர்முகத் தேர்தவுகள் அடுத்தமாத இறுதியில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.
இம்முறை நடத்தப்படவுள்ள நேர்முகத் தேர்வுகளின்போது வழங்கப்படும் புள்ளி முறைகள் மற்றும் புள்ளிகளை பெற்றோர் தெளிவாக அறிந்துகொள்வதற்கு முடியுமானவாறு ஆவணமொன்றை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.
இதுதொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாடசாலை அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கான இறுதி பெயர்பட்டியல் டிசம்பர் மாதம் தயாரிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment