Facebook நிறுவனம் இலவச Video Calling சேவையை Messenger Appsல் வழங்கியுள்ளது. இதன் மூலம் Facebook போன்று அதன் குறுந்தகவல் செயலியையும் பிரபலமாக்க திட்டமிட்டிருக்கின்றது. தற்சமயம் Messenger Appsல் சுமார் 60 லட்சம் பயனாளிகள் இருக்கின்றனர்.
Messenger செயலியின் வலது புறத்தில் மேல் பகுதியில் Video Icon இருக்கின்றது, இதற்கு முன் Voice மற்றும் Video Calling அம்சத்தினை கம்ப்யூட்டர்களுக்கு வழங்கியது. Messenger Of Microsoft நிறுவனத்தின் Skype, Appleன் பேஸ்டைம் Facetime, மற்றும் Googleன் Hangout போன்ற செயலிகளுக்கு போட்டியாக விளங்கும். இந்த சேவையானது ஆப்பிளின் IOS, கூகுளின்
Android இயங்குதளங்களில் பெல்ஜியம், கனடா, க்ரோடியா, டென்மார்க், பிரான்ஸ், க்ரீஸ், ஐயர்லாந்து, லித்துவேனியா, மெக்ஸிகோ, நைஜீரியா, நார்வே, ஓமன், போலாந்து, போர்சுகல், அமெரிக்கா மற்றும் உருகுவே போன்ற நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நாடகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment