GuidePedia

0



அமெரிக்காவில், கூகுள் நிறுவனம், அங்குள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. 

இது இன்றைய இணைய வேகத்தினைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும். பலர் இது அறிவியல் கதைகளில் மட்டுமே இருக்கும் என எண்ணுகின்றனர். ஆனால், நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகளுக்கு இந்த வேகம் நத்தை வேகத்திற்கு இணையானதாகும். ஏனென்றால், அவர்கள், விநாடிக்கு பத்தாயிரம் கிகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தைத் தரக்கூடிய ஷேடோ இன் டர்நெட் என்னும் அமைப்பை உருவாக்கி வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் அமைப்பினை, நாசா பயன்படுத்துவதில்லை. ESnet (Energy Science Network) என்னும் ஷேடோ நெட்வொர்க் ஒன்றை இந்த மைய விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட குழாய்கள் கட்டமைப்பில் இந்த டேட்டா பரிமாற்றம் நடைபெறுகிறது. தற்போது இவற்றின் மூலம் விநாடிக்கு 91 கிகா பிட்ஸ் டேட்டா பரிமாறப்படுகிறது. இதுதான், உலகிலேயே அதி வேக இணைய டேட்டா பரிமாற்றமாகும்.

நாசா இந்த வேக கட்டமைப்பினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரப்போவதில்லை. ESnet நெட்வொர்க்கினை அமெரிக்காவின் Department of Energy துறை இயக்கி வருகிறது.

அவர்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களில், பெரும் அளவில் டேட்டா பரிமாற்றம் செய்திட வேண்டியுள்ளது. இவற்றை ஹார்ட் டிஸ்க் வழியாக மாற்றிக் கொள்வதில் ஏற்படும் நேர விரயத்தைத் தடுக்க, இந்த அதிவேக நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது.

விஞ்ஞான ஆய்வுகள் நம் பூகோள அமைப்பினால் தாமதப்படக் கூடாது என்ற குறிக்கோளுடன் இந்த அதிவேக கட்டமைப்பு உருவாக்கப் பட்டதாகவும், இதன் வேகத்தினை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த துறை நிர்வாகி கிரிகோரி பெல் தெரிவித்துள்ளனர்.

பின்னொரு காலத்தில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Post a Comment

 
Top