GuidePedia

0



இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்கள்.
எதற்கெடுத்தாலும் பேஸ்புக் என்ற நிலை தான் உள்ளது, பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமல் யாருமே இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் இதில் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்களால்(Instant Messaging Application) அதாவது வாட்ஸ் அப், வீ சாட் போன்றவைகளால் பேஸ்புக் பயன்பாடு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் லாபம் கணிசமாக குறைந்ததுடன், அதன் பங்குகள் $77 வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 700 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ள வாட்ஸ் அப் இன்னும் வளர்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top