GuidePedia

0
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது பத்து கோடி பேருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவான புள்ளிவிபரங்களை பார்த்தால் ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகளில்தான் தற்கொலையும் அதிகம், மனநோயும் அதிகம். இந்தியாவை பொறுத்தவரை தற்கொலையும், மனஅழுத்த பாதிப்பும் அதிகம் இருந்த மாநிலம் கேரளா. இந்த பாதிப்பை வரிசைப்படுத்தும் போது கடந்த ஆண்டு வரை கேரளா முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுவரை 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது தற்கொலையிலும், மன அழுத்த பாதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரிய விஷயம்.
stress watch


இந்நிலையில் எம்வியோ ஸ்மார்ட் வாட்ச் ஒன்ரு வந்துள்ளது.இதில் நோட்டிபிகேஷன், விதவிதமான செயலிகள் எல்லாம் கிடையாது. ஆனால் இந்த வாட்ச் அதை அணிபவரின் இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து அதில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் போது மட்டும் தகவல் அளிக்கும். அத்தோடு ஸ்பெஷலாக டெய்லி உங்கள் மன அழுத்த அளவைக் கணக்கிட்டு அதன் ஏற்ற இறக்கம் பற்றி அறிக்கையும் அளிக்கிறது.

மன அழுத்தம் அதிகரித்தால் நமக்கே தெரியாதா என நீங்கள் நினைக்கலாம். மன அழுத்த அளவு கணிசமாக இருக்கும் போது தெரியும். ஆனால் பல நேரங்களில் ஒருவர் கவனிக்காத அளவுக்கு மிதமான மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். இவற்றை எல்லாம் கண்ணும் கருத்துமாகக் கவனித்து அளவிட்டுச் சொல்லும் வகையில் எம்வியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி மன அழுத்த அளவு அதிகரித்தால் அதைக் குறைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது. இந்த பயனுள்ள ஸ்மார்ட் வாட்ச் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் போதிய நிதி கேட்டு வந்திருக்கிறது. தேவையான நிதி கிடைத்தால் இரண்டு அளவுகளில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த எம்வியோவின் கிக்ஸ்டார்ட்டர் பக்கம்:

Post a Comment

 
Top