GuidePedia

0


 நீங்கள் சிறந்த வலைப்பதிவு எழுதுபவரா ;உங்கள் வலைத்தளத்தின்  பார்வையாளர்கள்  எண்ணிக்கை சிறப்பாக இருக்கின்றதா அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.
      கூகுல் அட்சென்ஸ் என்பது கூகுல் நிறுவனத்தினால் செயல்பட்டு வரும் விளம்பர சேவையாகும்.இதன் மூலம் சொந்தமாக வெப்சைட் அதாவது பிளாக்கர் ,வேர்ட்பிரஸ் போன்ற எந்த வகையான இணையத்தளம் வைத்திருந்தாலும் பணம் சம்பாதிக்க முடியும்.எப்படி என்றா கேட்கிறீர்கள்; நமது வலைத்தளங்களில் இந்த கூகுல் அட்சென்ஸ் தரும் விளம்பரங்களை முதலில் பிரசுரிக்க வேண்டும்.அதன் பின்னர் நமது வலைத்தளத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எட்சென்சினால் வழங்கப்பட்ட விளம்பரங்கள் மீது செய்யும் ஒவ்வொரு கிளிக்கிற்கும் அவர்கள் நமக்கு பணம் தருவார்கள்.
இது இன்றைய இணைய
சூழலில் சிறந்த பணம் சம்பாதிக்கும்  முறையாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                                      முதலில் கூகுல் அட்சென்ஸ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று பார்ப்பதற்கு முன் ,கூகுல் அட்சென்ஸ் ஆரம்பிப்பதற்கான அத்தியாவசியத் தேவைகள் சிலவற்றைப் பாப்போம்.

முக்கியமான செய்தி தமிழ் வலைத்தளங்களுக்கு கூகுல் அட்சென்ஸ் அனுமதி வழங்குவதில்லை.குறிப்பிட்ட சில மொழிகளுக்கு மாத்திரமேஅனுமதி வழங்கப்படுகின்றது.உங்கள் வலைத்தளம் ஆங்கில மொழியில் ஆரம்பிப்பது நல்லது.

*உங்களுக்கென்றே  தனியான இணையத்தளம் ஒன்று இருக்க வேண்டும்.
*GMAIL கணக்கொன்று இருக்க வேண்டும்.
*உங்கள் வலைப்பதிவுகளுக்கு சிறந்த பார்வையாளர்கள் வருகை இருக்க             வேண்டும்.
* வங்கிக் கணக்கொன்று  இருக்க வேண்டும்.

அடுத்ததாக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
கூகுள் அட்சென்ஸ் என்ற இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அட்சென்ஸ்ஸின் முகப்பக்கத்திற்கு செல்லுங்கள்.கீழுள்ள படத்தைப்போல திரை தோன்றும்.இதில் சிவப்பாக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள yes,use your account@gmail.com என்பதை கிளிக் செய்யுங்கள்.

 
அடுத்ததாக தோன்றும் திரையில்  GMAIL ID மற்றும் PASSWORD கொடுத்து SIGN IN செய்யவும்.



அடுத்த திரையில் உங்கள் இணையத்தள முகவரியையும் இணையத்தள மொழியையும் கொடுத்து CONTINUE செய்யவும்.
நான்காவதாக தோன்றும் திரையில் உங்கள் உண்மை தகவல்களை வழங்கி SUBMIT MY APPLICATION என்பதை கிளிக் செய்யுங்கள்.

SUBMIT செய்து 8-12 மணி நேரத்தில் APPROVAL கிடைத்துவிடும்.ஆனால் சிலருக்கு ஓரிரு நாட்கள் கூட ஆகலாம்.

நன்றி.

Post a Comment

 
Top