அப்பிள் தொழில்நுட்ப நிறுவனமானது பயன்பாட்டாளர் நேரத்தை அவதானிப்பதற்கு மட்டுமல்லாது தொலைபேசி அழைப்புகளையும் குறும் செய்திகளையும் பெறவும் தமது உடல் நலம் தொடர்பில் அறிந்து கொள்ளவும் உதவும் அதி தொழில்நுட்ப கைக்கடிகாரங்களை திங்கட்கிழமை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
18 மணி நேரம் தொடர்ந்து செயற்படக் கூடிய பற்றரியைக் கொண்ட இந்த கடிகாரங்கள், அவை கொண்டுள்ள வசதிகளுக்கு ஏற்ப 349 ஸ்ரேலிங் பவுண் தொடக்கம் 17,000 ஸ்ரேலிங் பவுண் வரையான பலதரப்பட்ட விலைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
தற்போது மேற்படி கடிகாரங்கள் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, சீனா, பிரான்ஸ், ஹொங்கொங், ஜப்பான் ஆகிய நாடுகளில் கிடைப்பனவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment