தற்சமயம் சந்தையில் வெளியாகும் தொழில்நுட்ப கருவிகளின் வடிவம் மற்றும் அளவு குறைந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் கீபோர்டுகளில் இருக்கும் ஸ்பேஸ் பார் பட்டனை நீக்க முடிவு செய்திருப்பதாக தெரிகின்றது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மேக்புக் கருவிகளில் கீபோர்டுகளின் இடத்தினை குறைத்திருப்பதை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரு முறைகளுக்கும் அதிகமாக இந்த திட்டத்தினை கூகுள் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் க்ரோம் லாப்டாப்களில் சிறிய அளவிலான ஸ்பேஸ் பார் பட்டனை விரைவில் கூகுள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment