ஆப்பிள் ஐபோன் 6 வெளியாகி சில மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை போனாக ஐபோன் 7 இருக்கும் என செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன. இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 7 குறித்து பல செய்திகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இங்கு ஹோம் பட்டன் இல்லாமல் வெளியாகி இருக்கும் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை பாருங்கள்..
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் கருவியை வெளியிடும் முன் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 போனை வெளியிடும் என்று கூறப்படுகின்றது.ஜெர்மன் பப்ளிகேஷன் கம்ப்யூட்டர் பில்டு மற்றும் வடிவமைப்பாளரான மார்டின் ஹேஜெக் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை தயாரித்துள்ளனர்.ஐபோன் 7 டிஸ்ப்ளேவானது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு ஹோம் பட்டனும் அதனுள் வைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 7 பின்புறத்தில் விளக்குடன் கூடிய ஆப்பிள் லோகோ மற்றும் இரு லென்ஸ் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கான்செப்ட் புகைப்படங்கள் பார்க்க உண்மையானது போன்று காட்சியளிக்கின்றது. இருந்து இவைகளில் மாறுதல்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.
Post a Comment