அனைத்து விதமான கோப்புகளையும் நாம் நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளும் போதும், அலுவலக சம்பந்தமான முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை பாதுகாப்பாக வைக்கவும் மேலும் அதனை மற்றவர்களுக்கு தெரிந்து விடாமல் பாதுகாப்பாக மின்னஞ்சல் அனுப்பவும். மென்பொருளை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் இலவசமாகவே மென்பொருள் ஒன்று கிடைக்கிறது. இந்த மென்பொருள் மூலம் கோப்புகளை Encrypt மற்றும் Decrypt செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் எந்த கோப்பினை கடவுச்சொல் கொண்டு பூட்ட நினைக்கிறீர்களோ அதன் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Encrypt என்னும் தேர்வினை தெரிவு செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK என்ற பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் கோப்பானது மாற்றப்பட்டு விடும்.
Encrypt செய்து பூட்டப்பட்ட கோப்பினை திறக்க , கோப்பின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் சாளரப்பெட்டியில் Decrypt என்னும் தேர்வினை தெரிவு செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். கோப்பானது மீண்டும் சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.
இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் எளிதாக கோப்புகளை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள முடியும்.
Post a Comment