உலகில் அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவிகளில் ஒன்றான Mozilla நிறுவனத்தின் Firefox ஆனது அன்ரோயிட் சாதனங்களுக்கான தரவிறக்கத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது அன்ரோயிட் சாதனங்களுக்காக 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் சுமார் 100 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவானதும், இலகுவானதுமான இணையத்தேடலை மேற்கொள்ள உதவும் இந்த உலாவி Do Not Track எனும் கண்காணிக்க முடியாத சிறப்பு வசதி உட்பட ஏனைய பல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment