நாம் மைக்ரோசாப்ட் Excel பயன்பாட்டினை உபயோகித்து பெரிய Worksheetகளை உருவாக்கும் பொழுது, சில சமயங்களில் duplicate என்ட்ரிகள் வருவதை தவிர்க்க இயலாது. 1000 க்கும் மேற்பட்ட டேட்டாகளை கையாளும் பொழுது, இவ்வாறு வரும் Duplicate Entry களை கண்டறிவது, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு காரியமாகும்.
இந்த வேலையை உங்களுக்கு எளிதாக்க பல மென்பொருள் கருவிகள் இருந்தாலும் அவை விலை கொடுத்து வாங்க வேண்டிய (குறைந்த பட்சம் 30 டாலர்கள்) சூழ்நிலை உள்ளது. இதோ உங்களுக்காக ஒரு இலவச மென்பொருள் நீட்சி! DuplicatesRemover v2.0 (தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்).
இதை நிறுவிக் கொண்ட பிறகு Excel ஐ திறந்து பார்த்தால், Add-Ins ரிப்பன் மெனுவில் இந்த புதிய நீட்சிக்கான பட்டன் வந்திருப்பதை காணலாம்.
இப்பொழுது Duplicate ஐ கண்டறிவதற்கான எச்செல் கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
Duplicates Remover பொத்தானை அழுத்தவும். இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில், எந்த Column த்தில் உள்ள டேட்டாக்களில் Duplicate entry களை கண்டறிய வேண்டுமோ, அந்த column ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரே சமயத்தில் பல Column களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
உதாரணமாக Column B , தேர்வு செய்து அடுத்துள்ள Action பகுதியில் Delete Duplicates / Highlight Duplicates / sort data and highlight duplicates / move to bottom and highlight duplicates / examine for duplicates போன்ற வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்துள்ள Comparing Options பகுதியில் case sensitive / Trim White space ஆகிய வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து கொண்டு,
Start பொத்தானை அழுத்துங்கள்! அவ்வளவுதான்! நொடிகளில் உங்கள் கோப்பிலுள்ள Duplicate களை கண்டறிந்து தேவையை பூர்த்தி செய்கிறது.
Post a Comment