GuidePedia

0
இன்று பல கருவிகள் சிம் கார்டு பொருத்தும் வசதி இல்லாமல் வெளியாகி வருகின்றது. பொதுவாக சிம் கார்டு இல்லாத கருவிகளில் வைபை அல்லது கேபிள்களை பயன்படுத்தி இன்டர்நெட் பயன்படுத்த முடியும். இங்கு சிம்கார்டு இல்லாத கருவிகளில் வாட்ஸ்ஆப் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்
உங்களது கருவியில் சிம் கார்டு இல்லை என்றால் கவலை வேண்டாம், ஆனால் அதில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி நிச்சயம் இருக்க வேண்டும். வாட்ஸ்ஆப் பயன்படுத்த இன்டர்நெட் தான் வேண்டும். வாட்ஸ்ஆப் பயன்படுத்த சிம் கார்டு அவசியம் கிடையாது, ஆனால் வாட்ஸ்ஆப் மூலம் பதிவு செய்யப்படாத மொபைல் நம்பர் மிகவும் அவசியமாகும்.
இனி சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்யலாம். முதலில் உங்களது கருவியை இன்ட்ரநெட்டுடன் இணைக்க வேண்டும். அடுத்து WhatsApp Messenger download பக்கத்திற்கு சென்று செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.செயலியை இன்ஸ்டால் செய்து முடித்த பின் அதனை ஸ்டார்ட் செய்ய வேண்டும். பின் வாட்ஸ்ஆப் வெல்கம் ஸ்கிரீன் தெரியும் அங்கு செயலியின் விதிமுறைகளை நன்கு படித்த பின் தொடரவும்.
அடுத்த ஸ்கிரீனில் உங்களது போன் நம்பரை வெரிஃபை செய்வது அவசியமாகும், இங்கு வாட்ஸ்ஆப் செயலியில் பதிவு செய்யப்படாத மொபைல் நம்பரை பதிவு செய்து ஓகே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், இங்கு வெரிபிகேஷன் பெயில் ஆகும், கவலை வேண்டாம் அடுத்து வரும் வெரிபிகேஷன் கோடை மொபைலில் பதிவு செய்து வெரிஃபை செய்ய வேண்டும்.
உங்களது மொபைல் நம்பருக்கு வெரிபிகேஷன் எஸ்எம்எஸ் வந்து சேர 10 நிமிடங்கள் ஆகும், அது வரை காத்திருக்கவும். ஒரு வேலை 15 நிமிடங்கள் ஆகியும் எஸ்.எம்.எஸ் வந்து சேரவில்லை என்றால் Call me என்ற பட்டனை க்ளிக் செய்து, அழைப்பு மூலம் வெரிஃபை செய்யலாம்.
அடுத்த ஸ்கிரீனில் வாட்ஸ்ஆப் செயலியில் உங்களது பெயரை குறிப்பிட்டு பின் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்தலாம்.
சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது ஆரம்பத்தில் மட்டும் மொபைல் நம்பரை கொண்டு வெரிஃபை செய்தால் போதுமானது.

Post a Comment

 
Top