GuidePedia

0
உலகில் உள்ள பெரும்பான்மையோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுக்கு இடையே தகவல்கள் படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் பகிரப் பயன்படும் ஓர் அருமையான சமூக இணையதளம் பேஸ்புக். 
இந்த இணையதள வசதியை தற்பொழுது இணைய இணைப்பு இல்லாத மொபைல்களிலும் பயன்படுத்தும் வசதியை இந்திய பொதுத்துறை நிறுவனமான BSNL அளிக்கிறது. 
இந்நிறுவனத்தின் மொபைல் போன் இணைப்பு கொண்டிருப்பவர்கள், தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும் கூட, பேஸ்புக் தளத்தை தொடர்பு கொள்ள முடியும். 
ஆனால் இதற்கு சிறு கட்டணமாக மூன்று நாட்களுக்கு ரூபாய் 4ம், வாரம் ஒன்றிற்கு ரூபாய் 10ம், மாதமொன்றிற்கு பயன்படுத்த ரூபாய் 20 கட்டணமாக செலுத்த வேண்டும். 
இணைய இணைப்பில்லா பேஸ்புக் பயன்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம்  U2opia Mobile என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
இந்த வசதியானது  Unstructured Supplementary Service Data (USSD) என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது  இந்த வசதி மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இது கிடைக்கிறது. 
USSD தொழில் நுட்பத்தினை, முன் கூட்டியே பணம் செலுத்தி, பதில் அழைப்புகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தலாம். இடம் சார்ந்த தகவல் வசதிகளைப் பெறலாம். மெனு வழங்கி அதன் பிரிவுகளுக்கேற்ப வசதிகளைத் தரலாம். 
தற்போது தொலை தொடர்பு துறையில் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்ப இந்த வசிதைய பயன்படுத்தி வருகின்றனர். 
பி.எஸ்.என்.எல். ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தினால், இதன் வாடிக்கையாளர்கள், பேஸ்புக் தளத்தினை, தங்கள் அக்கவுண்ட்டில், இணைய இணைப்பு பெறாவிடினும் அணுக முடியும். மெசேஜ்களை அமைக்க, காண இயலும். நண்பர்கள் விடுத்துள்ள கேள்வி மற்றும் வேண்டுகோள்களுக்குப் பதில் அளிக்க முடியும். தங்கள் நண்பர்களின் பக்கங்களில் தகவல்கள, செய்திகளை எழுத முடியும். பிறந்த நாள் வாழ்த்து குறித்த தகவல்களைப் பெற்று, அதற்கேற்ப வாழ்த்துகளை அனுப்ப முடியும்.
இந்த வசதியினை வாடிக்கையாளர்களுக்கு முதல் முதலாக வழங்குவதன் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று இந்நிறுவன இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார். 
தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்பும் பல கோடி மக்களுக்கு இந்த சேவையும் வசதியும் உண்மையிலேயே ஒரு பெரிய உதவி என்று யுடோபியா மொபைல் நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.
இனி பி.எஸ்.என்.எல் மொபைல் பயனராக இருப்பவர்கள் இணைய இணைப்பு இல்லாமலும் பேஸ்புக்கைப் பயன்படுத்தலாம். பேஸ்புக் பிரியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி ஆகும்.

Post a Comment

 
Top