இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
மேலே படத்தில் உள்ளது Settings - Permissions - ADD AUTHORS என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
அடுத்து கீழே உள்ள INVITE என்ற பட்டனை அழுத்தி விடவும். அழுத்தியவுடன் உங்களின் அழைப்பு அந்த மெயில் ஐடிக்கு சென்று இருக்கும். அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்களின் புதிய ஈமெயில் ஐடியை கொடுத்து பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழையவும்.
ACCEPT INVITATION என்ற பட்டனை அழுத்தி விட்டால் போதும் உங்களின் கணக்கு துவங்கி விடும். இப்பொழுது நீங்கள் மறுபடியும் உங்களின் பழைய மெயில் ஐடியில் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளவும்.
Settings - Permissions பகுதிக்கு செல்லவும்.
மேலே உள்ள படத்தில் நான் வட்ட மிட்டு காட்டியுள்ள இடத்தில் உள்ள Grant admin என்ற லிங்கை க்ளிக் செய்து அடுத்து வரும் விண்டோவிலும் GRANT ADMIN என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் இரண்டு மெயில் களுக்கு நேராகவும் admin என்று வருவதை உறுதி செய்து கொண்டு தேவையில்லாத(பழைய) ஈமெயிலுக்கு நேராக உள்ள remove லிங்கை க்ளிக் செய்து பழைய ஈமெயில் அளித்து விடவும். அவ்வளவு தான் இனி நீங்கள் பிளாக்கரில் பழைய இமெயில் கொடுத்தால் வேலை செய்யது புதிய ஈமெயில் கொடுத்து பிளாக்கர் தளத்தில் நுழைந்து கொள்ளலாம்.
Post a Comment