GuidePedia

0



Browserல் இடையிடையே சில இணையப்பக்கங்கள் திறந்துகொள்வதில் சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதன்போது சிலவகையான ''Error Codes'' தோன்றும். அவை என்னென்ன காரணத்தால் தோன்றுகின்றன. என அறிந்து கொண்டால் அவற்றை சரிசெய்யலாமல்லவா.


Error 400 - தவறான கோரிக்கை. அதாவது நீங்கள் AdressBAR ல் தட்டச்சிட்ட URL name தவறாக இருப்பதால்(spelling mistake) இந்த Error Code தோன்றும்.


Error 401 - இது உங்களுக்கு உரித்துடையதல்லாத கணக்கினுள் நுழைய முற்படும்போது தோன்றும். அதாவது நீங்கள் உங்கள் இணைய கணக்கினுள் நுழைய தட்டச்சிட்ட username and password என்பவற்றில் ஏதாவது தவறிருந்தால் இந்த Error Code தோன்றும்.

Error 403 - இந்த Error Code நீங்கள் முடக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பக்கமொன்றையோ அல்லது காலாவதியான (domain) தளமொன்றினை பார்க்க முற்படும்போதோ தோன்றும்.

Error 404
- இது பலருக்கும் பழக்கப்பட்ட ஒரு Error Code. வலை உலவலில் அடிக்கடி இந்த Error Code தோன்றி உங்களை எரிச்சலூட்டியிருக்கும். இது நீங்கள் திறப்பதற்கு முயற்சிக்கும் பக்கம் வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது அந்த பக்கம் மறுபெயராக்கம்(re-named) செய்யப்பட்டிருந்தாலோ தோன்றும். சிலவேளைகளில் URL தவறாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

Error 408 - உங்களின் கோரிக்கை உரிய நேரத்தில் நீங்கள் திறக்க விரும்பிய பக்கங்களின் சேவை வழங்கிகளான சேர்வர்களை சென்றடையாத போது இந்த Error Code தோன்றும்.

மேலும் சில Error Codes......


Error 500 -Internal error.

Error 501 - Not Implemented.

Error 502 - Bad Gateway.

Error 503 -Service unavailable.

Error 504 - Gateway Time-Out

Error 505 - HTTP Version not supported/unknown host

Error 500 - 599 - Server Errors. 
பொதுவாகServer களில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் காரணமாகவே இந்தவகை Error Codes தோன்றுகின்றன.

Post a Comment

 
Top